×

‘நல்லா கிளப்புறாங்கயா பீதியை’

திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக சார்பில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த கே.குப்பன் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்  என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. மேலும், தற்போது திருவொற்றியூர் மேற்கு பகுதி அதிமுக செயலாளராக உள்ள குப்பன்  பதவியில் இல்லாத போதும் தொடர்ந்து தொகுதியில் நடைபெறும் அரசின் திட்டப் பணிகளை பார்வையிடுவது, முடிந்த பணிகளை துவக்கி வைப்பது, வார்டுகளில் சென்று மக்களுடைய குறைகளை கேட்பது என மக்களோடு தொடர்பிலேயே இருந்து வருகிறார். இவ்வாறு இருந்தால் தான் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமை திருவொற்றியூர் தொகுதிக்கு தன்னை வேட்பாளராக அறிவிக்கும் என்ற முழு நம்பிக்கையில் இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும், தேர்தல்  பணிகளை  எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து  அதிமுக தொண்டர்களை பகுதி பகுதியாகச் சென்று சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவொற்றியூர் தொகுதி சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாகவும் அதனுடைய தலைவர் சரத்குமார் வேட்பாளராக நிற்க போவதாகவும் பேச்சு பரவியது. இது சம்பந்தமான ஒரு வாட்ஸ்அப் பதிவும் சமூக வலைதளங்களில் பரவியது.  இதனால் திருவொற்றியூர் தொகுதி சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விடுமோ, அவ்வாறு ஒதுக்கினால் இத்தனை காலம் செய்த கட்சி பணி அனைத்தும் வீணாகிவிடுமோ என்று குப்பனும், அவரது ஆதரவாளர்களும் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.



Tags : Cloudnangaya , K. Kuppan, a two-time AIADMK MLA from Tiruvottiyur constituency
× RELATED ஒடிசாவுக்கு அளித்த வாக்குறுதிகள்...